கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
உயர்விலும் தாழ்விலும், காட்டிலும், நாட்டிலும்
உன்னதர் படையில் பணிபுரிவோம்
இறைமகன் இயேசு வாழ்க, வாழ்க
அதியமானவர் வாழ்க, வாழ்க
வல்லமையுள்ளவர் வாழ்க, வாழ்க
மரித்துயிர்த் தெழுந்தாரே
சத்திய கச்சையை அரையினில் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
ஆயத்த பாதரட்சையை தொடுத்தே
விசுவாச கேடயத்தை பிடிப்போம் - இறைமகன்
இரட்சண்ய சலை சீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் - இறைமகன்
வாழ்க... வாழ்க... வாழ்க... (2)
வாழ்க நீர் வாழ்க உம் நாமம் வாழ்க
உம் புகழ் வாழ்க, என்றென்றும் வாழ்க